கோடை விடுமுறையில் சிறப்பு

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை கோடைகால விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனி யார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘நீட்’ உள்ளிட்ட பல்வேறு பொதுத் தேர்வுகளை மாணவர் கள் எதிர்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுத் தேர்வு முடிந்த பிறகு, மதிப்பெண்கள் அடிப்படையில் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

எஸ்எஸ்எல்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு, 9 கல்லூரிகளில் தனி பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம் அவர்கள் எந்த தேர்வையும் சந்திக்கும் துணிவைப் பெறுவர். பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தப் பாடம் பயிலலாம் என்று மாணவர்களிடையே குழப்பம் உள்ளது.

பிளஸ் 2 முடித்த பிறகு 286 வகையான பாடத் திட்டங்களில் மேற்படிப்பு பயிலலாம். இதுகுறித்து அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்.

இதன்மூலம் குறிப்பிட்ட பாடம் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொண்டு, பயனடையலாம். அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் மூலம் மாணவர்கள் பய ணம் செய்வதில் உள்ள சிரமங் கள் தொடர்பாக புகார்கள் வந்தால், உடனடியாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக் கப்படும்.

கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.