பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது

பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் சிலரிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு, ‘3 மதிப்பெண் கேள்விகளில் 3 வினாக்கள் பதில் அளிக்கும்படி இல்லை.

அந்த கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டவை. அவை அனைத்தும் சற்று கடினமாக இருந்தன.

மற்ற அனைத்து வினாக்களும் எளிதாகத்தான் கேட்கப்பட்டிருந்தன’ என்றனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. இதனால் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தது நேற்று நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்ததாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவர் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.