அண்ணா பல்கலை. துணைவேந்தராக எம்.கே.சுரப்பா பொறுப்ப

அண்ணா பல்கலை. துணைவேந்தராக எம்.கே.சுரப்பா பொறுப்பேற்றார் பதிவாளர், பேராசிரியர்கள் வாழ்த்து

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.கே.சுரப்பா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக திகழும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய எம்.ராஜாராமின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சுரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சுரப்பா, நேற்று காலை 9 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்றவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி, அண்ணா, திருவள்ளுவர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா பல்கலை. துணைவேந்தராக எம்.கே.சுரப்பா பொறுப்பதுணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள சுரப்பாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்திரியராஜ் உட்பட பல்வேறு மையங்களின் இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.