இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு (தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு) ஜுன் 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 16 முதல் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50. மதிப்பெண் சான்றிதழ் முதல் ஆண்டுக்கு ரூ.100. இரண்டாம் ஆண்டுக்கு ரூ.100. பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.13. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகேயுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கேய தேர்வுக்கட்டணத்தையும் செலுத்திவிடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.