ஆராய்ச்சி மையத்தில் வேலை

ஆராய்ச்சி மையத்தில் வேலை

ஆராய்ச்சி மையத்தில் வேலை
ஆராய்ச்சி மையத்தில் வேலை | டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் -மருத்துவமனை பல இடங்களில் செயல்படுகிறது.

தற்போது வாரணாசியில் உள்ள இதன் கிளை மருத்துவ மனையில் சயின்டிபிக் ஆபீசர், டெக்னீசியன், பார்மசிஸ்ட், நர்ஸ், சப் ஆபீசர், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மருத்துவ பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், பார்மசி, நர்சிங், மருத்துவ தொழில்நுட்ப படிப்புகள், ஆய்வக தொழில்நுட்பனர் படிப்பு படித்தவர்கள் மற்றும் 10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது.

அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி ஆகியவற்றை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 27-4-2018-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களை http://tmc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.