சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை | தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது.

தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் நேர்முக உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பணிக்கு 71 இடங்களும், பதிவாளர்களின் நேர்முக உதவியாளர் பணிக்கு 10 இடங்களும், துணைப் பதிவாளரின் பெர்சனல் கிளார்க் பணிக்கு ஒரு இடமும் உள்ளது.

இந்த பணிகளுக்கு அறிவியல், கலை, பொறியியல், மருத்துவம் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 1-7-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பொது பிரிவினர், ஓ.பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் டி.டி.யாக இணைக்கப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 2-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.hcmadras.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.