உருக்கு நிறுவனத்தில் நர்ஸ் வேலை

உருக்கு நிறுவனத்தில் நர்ஸ் வேலை

 

உருக்கு நிறுவனத்தில் நர்ஸ் வேலை | இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) என அழைக்கப்படுகிறது.

சேலம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தற்போது துர்காபூரில் உள்ள செயில் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டி.எஸ்.பி. மருத்துவமனையில், புரோபிசியன்சி டிரெயினி (நர்ஸ்) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

இந்த பணிக்கு 22-4-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓ.பி.சி. பிரிவினர் 33 வயதுடையவர்களும், எஸ்.சி.,எஸ். டி. பிரிவினர் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பி.எஸ்சி. நர்சிங், பட்டப்படிப்பு, ஜெனரல் நர்சிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி dspintake@saildsp.co.in என்ற மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அத்துடன் தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.

நேர்காணலுக்குச் செல்லும்போது விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

உருக்கு நிறுவனத்தில் நர்ஸ் வேலைவிண்ணப்பிக்க 20-4-2018-ந் தேதி கடைசிநாள். நேர்காணல் 22-4-2018 நேர்காணல் துர்காபூர் செயில் நிறுவன வளாகத்தில் நடக்கிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://sail.co.in/ என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.