எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு அரசு தேர்வுகள் இயக்குனர் தகவல்

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாணவர்கள் நலன் கருதி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மார்ச், ஏப்ரல்-2018, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான பெயர் பட்டியல்களில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம், தமிழ்), பிறந்த தேதி, பாடத்தொகுதி எண், பயிற்றுமொழி, பள்ளியின் பெயர் ஆகியவற்றில் மட்டும் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒருவாய்ப்பு பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெயர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்களின் விவரங்களை, தனித்தனியே பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்

முதன்மை கல்வி அலுவலர்கள் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதிக்குள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பெறப்படுகின்ற மார்ச், ஏப்ரல்-2018 எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கான பெயர் பட்டியல்களில் திருத்தங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.