தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சென்னையில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நீட்’ விலக்கு மாநாடு உலக தமிழ் அமைப்பு, தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா, உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜன், அரி பரந்தாமன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், பா.ம.க. சார்பில் வக்கீல் பாலு, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆலூர் ஷானவாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ மாணவர்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

7 தீர்மானங்கள் மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில தீர்மானங்கள் வருமாறு:- * தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவை மத்திய அரசு உடனடியாக சட்டமாக்க வேண்டும்.

* கல்வி உரிமை சட்டத்தை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். * தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர் கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மாநில அரசு கொண்டுவர வேண்டும்.

* தமிழ் இன மீட்சிக்காக போராடி வருகின்ற இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் இந்த மாநாடு பாராட்டுக்களை தெரிவிக்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்குனர் வ.கவுதமன் செய்திருந்தார்.