நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

நூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க

நூலகங்களுக்கு புத்தகங் கள் வாங்கும் வகையில் பதிப்பாளர்கள் மற்றும் புத் தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்ரல் 27-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக பொது நூலக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது நூலக இயக்கத்தின்கீழ் செயல்படும் பொது நூலகங்களுக்கு 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 19-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பதிப்பகத்தார் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாதிரி நூல்களை பொது நூலக இயக்ககத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.