ஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு

ஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் (பொறுப்பு) இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: குரூப்-2 பணிகளில் 1,094 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல் கட்ட கலந்தாய்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது.

இக்கலந்தாய்வு முடிந்து, நிரப்பப்படாமல் உள்ள 88 காலியிடங்களில் 45 இடங்களை நிரப்பும் வகையில் 2-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

மறுவாய்ப்பு இல்லை கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறினால், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அடிப்படை சம்பள விகிதம் 9,300/- ல் ஏதேனும் ஒரு பதவியைத் தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில், ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் அழைக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தெரிவு பெறும் வாய்ப்பு இல்லை எனவும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள்.