சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு 10-ம் வகுப்பு மாணவர்

சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 2

சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு 10-ம் வகுப்பு மாணவர்

சி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 2 | மத்திய கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கி நடந்துவருகிறது.

இதில் கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாளில் விரிவாக எழுதும் பிரிவில் அச்சுப்பிழை இருந்தது.

இதுகுறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் மத்திய கல்வி வாரியத்துக்கு புகார் கொடுத்தனர்.

வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற கல்வி வாரியத்தின் கொள்கைப்படி அந்த தேர்வில் கருணை மதிப்பெண்ணாக 2 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில தேர்வில் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள (சரியாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும்) அனைத்து மாணவர்களுக்கும் 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது.