ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி ஓய்வூதிய விதிகளில்

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி ஓய்வூதிய விதிகளில்

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது.

குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்தால், அவர் வாங்கிய மாதச் சம்பளத்துக்கு இரண்டு மடங்கை அவரது இறப்பு பணிக்கொடையாக வழங்க வேண்டும்.

இறப்பு நிகழ்ந்து 1-5 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 6 மடங்கும், 5-11 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 12 மடங்கும், 11-20 ஆண்டுக்குள் இருந்தால் சம்பளத்தில் 15 மடங்கும், 20 ஆண்டுக்கு மேல் இருந்தால் அதிகபட்சம் 33 மடங்கும் இறப்பு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.