புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை

புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி பபாசி அமைப்பு அறிவிப்பு

புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை

புத்தக தினம் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் எஸ். வயிரவன், செயலாளர் அரு. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளன.

சென்னையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (அனைத்து கிளைகளிலும்) கண்ணதாசன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், குமரன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம் – அநுராகம், வனிதா பதிப்பகம், சாஜிதா புக் செண்டர், இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், நவீன விருட்சம் மற்றும் பொள்ளாச்சி எதிர் வெளியீடு, ராஜபாளையம் முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையகங்களில் மேற்கண்ட சலுகையை பெறலாம்.

மேலும், உலக புத்தக தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் கன்னிமரா நூலக வளாகத்தில் அமைந்துள்ள நிரந்தரப் புத்தகக் காட்சி வளாகத்திலும் சிறப்புக் கழிவுடன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.