மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளை

மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளை

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அலுவலக பணியிடங்களில் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், அதிகாரி பணியிடங்களில் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது.

அதிகாரி தரத்திலான பணிக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை https://recruit.iitm.ac.in/external/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 19-5-2018-ந் தேதியாகும்.