5  ஆம் வகுப்பு தேர்ச்சியா?கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் உள்ள வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கிராம உதவியாளர் : 05 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

5-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

01.07.2020 அன்றைய தேதிபடி 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது

தேர்வு முறை :

பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்கானல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

வேடசந்தூர வட்டத்தை சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://dindigul.nic.in/village-assistant-job-vedasandur/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2020 மாலை 5.45 மணி வரை