ரூ 30,000 வரை சம்பளம் -சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வருகிற 18-ம் தேதி பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான தொழில் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது என சென்னை பட்டியலின மற்றும் பழங்குடியினர் தேசிய தொழில் மையத்தில் பிராந்திய தலைவரான எஸ் கே சாஹு தெரிவித்துள்ளார்.

தொழில் பயிற்சி முகாம்:

பின்தங்கியுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்றம் பெற தொடர்ந்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்றம் பெற உகந்த சூழலை உருவாக்கும் வண்ணம் அரசு உரிய கொள்கைகளையும், பல நலத்திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது.

தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கான தொழில் பயிற்சி வருகிற 18-ம் தேதி காலை 9.30 மணி முதல் 4.30 மணிவரை நடைபெறவுள்ளது. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் தொழில் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை பட்டியலின மற்றும் பழங்குடியினர் தேசிய தொழில் மையத்தில் பிராந்திய தலைவரான எஸ் கே சாஹு கூறுகையில், தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் கிடைக்கும். 20 முதல் 35 வயதுடையவர்கள் அதில் கலந்து கொள்ளலாம், பட்டதாரிகளும் அதை விட அதிகம் கல்வி தகுதி உள்ளவர்களும் அதில் கலந்து கொள்ளலாம். எனினும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக சென்று பதிவிடலாம் அல்லது பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான தொழில் பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு தங்கள் ஆதார் என்ணை பயன்படுத்த வேண்டும். தங்கள் ஆவணங்களின் அசலையும் நகலையும் எடுத்து செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அவர் கூறினார்.