அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலைபட்டதாரி ஆசிரிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலைபட்டதாரி ஆசிரிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

முதுகலை பட்டதாரி ஆசிரியர் : 48 காலிப்பணியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் : 117 காலிப்பணியிடங்கள்
இடைநிலை ஆசிரியர் : 33 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

முதுகலை பட்டதாரி ஆசிரியர் : ரூ.

8,000/-
பட்டதாரி ஆசிரியர் : ரூ. 9,000/-
இடைநிலை ஆசிரியர் : ரூ. 10,000/-

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் வகுப்பு நடத்துதல் அடிப்படையில் தெரிவுச் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை தொடர்புடைய மாவட்ட திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆதாரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://drive.google.com/file/d/1-gFEW28ds-5xr9fMM-6cqwnroAFQUnCc/view பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2020