ரூ 1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை விண்ணப்பித்துவிட்டீர்களா!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400

வயதுவரம்பு: 01.07.2020 ஆம் தேதியின்படி 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://kanchi.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 07.01.2021

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவதற்குhttps://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.