ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 3223/TPR/ Estt/2020-21

நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd

மொத்த காலியிடங்கள்: 13 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி:  Technician (Lab) – 01
பணி:  Technician (Electrical) – 01
பணி:  Technician (Refrigeration) – 01
பணி:  Technician (Operation) – 01
பணி:  Technician (Boiler) – 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும்,  பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ,19,500-62,000

பணி:  Light vehicle Driver – 03
பணி:  Heavy vehicle Driver – 05

வயது வரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும் மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

சம்பளம்: மாதம் ரூ,19,500-62,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:  ரூ.250. கட்டணத்தை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ (TDCMPU), Tirupur என்ற பெயருக்கு வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யுப்படும் முறை:  கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com.என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam road,Tirupur – 641 605”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2021

மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Tech%20&%20Drivers%20-%20TPR%20Application%20Form-19.12.2020%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்