சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைந்தன.

மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெற்ற பொருளாதார பாடத் தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து, பொருளாதார பாடத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

அதன்படி, மறுதேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடந்தது. மாணவர்கள் தங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே மையங்களில் தேர்வெழுதினர். வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.