அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம்

அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம்

அஞ்சல் துறையில் கணக்கர் பதவிக்கான தேர்வு அடுத்த மாதம் 14ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. அஞ்சல் தேர்வை தமிழிலும் நடத்தக் கோரி மதுரை மக்களவை எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா, ‘அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான துறை வாரியத் தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம். அதற்கு ஏற்றவாறு அனைத்து நடைமுறைகளும் விரைந்து தயார் படுத்தப்படும்,’ என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அஞ்சல் துறை தேர்வு எழுதுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.