வேலைவாய்ப்பு: “எழுதப்படிக்க தெரிந்தால் போதும்”. அரசு வேலை ரெடி. உடனே போங்க..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:

அலுவலக உதவியாளர் – 01
இரவுக்காவலர் – 01
ஈப்பு ஓட்டுநர் – 01

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலர் பணிக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய அரசுச் சட்டம்59/1988)-ன்படி கீழான தகுதியுடைய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை 25.01.2021 பிற்பகல் 05:45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.