ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.60,000/-

புதுச்சேரியில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Research Fellow, Junior Medical Officer மற்றும் Content Developer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

பணியிடங்கள் :

Content Developer, Junior Medical Officer மற்றும் Senior Research Fellow தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JIPMER வயது வரம்பு :

அதிகபட்சம் 30-35 வயதிற்குள் இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் கல்வித்தகுதி :
  • Content Developer – Any Degree தேர்ச்சியுடன் CS/ IT/ Multimedia இவற்றில் ஏதேனும் ஒன்றில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Medical Officer – MBBS தேர்ச்சியுடன் Junior Resident பணியில் ஒரு வருட காலம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Senior Research Fellow – Medical Biochemistry/ Biochemistry/ Molecular Biology/ Genetics/ BioTech பாடங்களில் M.Sc தேர்ச்சி அல்லது M.Tech (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Content Developer – ரூ.30,000/-
  • Junior Medical Officer – ரூ.60,000/-
  • Senior Research Fellow – SERB விதிமுறைப்படி வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். Senior Research Fellow பணிக்கு 17.02.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Content Developer பணிக்கு 03.02.2021 அன்றுக்குள் நோடல் அதிகாரி, என்.எம்.சி.என் திட்டம், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நான்காவது மாடி, எஸ்எஸ் பிளாக், ஜிப்மர், புதுச்சேரி -605006 என்ற முகவரிக்கு, Junior Medical Officer பணிக்கு 10.02.2021 அன்றுக்குள் dbtsleproject2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் இந்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.