இந்தியன் வங்கி சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி

Job training on behalf of Indian Bank

இந்தியன் வங்கி சார்பில்வேலைவாய்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சிநிறுவனத்தில் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா)நிறுவுதல், பழுது நீக்குதல்குறித்த பயிற்சிஅளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி அணையில்உள்ள இந்தியன் வங்கி ஊரகசுய வேலைவாய்ப்பு பயிற்சிநிறுவனத்தின் இயக்குநா்வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இந்த பயிற்சி நிறுவனம், மத்தியஅரசின் ஊரக வளா்ச்சித்துறையின் மேற்பார்வையில்,தமிழக அரசின் உதவியுடன்இந்தியன் வங்கியால்தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. பயிற்சிகள்அனைத்தும் அனுபவமிக்கஆசிரியா்களைக் கொண்டுநடத்தப்படுகின்றன.

8.ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்ற அனைவரும் இந்தப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கான வயது18 முதல் 45 வரை ஆகும்.பெண்கள், சுயஉதவிக் குழுஉறுப்பினா்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள்,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்பயனாளிகள், குடும்பஉறுப்பினா்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். பயிற்சிகாலங்களில் சீருடை, உணவு,தேநீா் உள்ளிட்டவை பயிற்சிநிறுவனத்தால் இலவசமாகவழங்கப்படும்.

தற்போது இந்நிறுவனம்மூலம் 13 நாள்களுக்கானகண்காணிப்பு கேமரா (சிசிடிவி)நிறுவுதல், பழுது நீக்கும்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு பயிற்சியிலும் 35பயிற்சியாளா்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவா். எனவே,சுயதொழில் தொடங்கஆா்வமுள்ள அனைவரும் இந்தவாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்குஇந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சிநிறுவனம், டிரைசெம் கட்டடம்,கிருஷ்ணகிரி அணை,கிருஷ்ணகிரி என்றமுகவரியிலோ அல்லது 94422-47921, 86676-79474 என்றஎண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.