இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 : சம்பளம்: ரூ.1,05,000/-

மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Production பிரிவில் Junior Engineering Assistant – IV பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Junior Engineering Assistant – IV (Production) பணிகளுக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

JEA வயது வரம்பு :

31.01.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

IOCL கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemical / Refinery & Petrochemical Engineering பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி அல்லது Maths, Physics, Chemistry அல்லது Industrial Chemistry பாடப்பிரிவுகளில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Operation (rotating shift) of Pump House , Fired Heater, Compressor, Distillation Column, Reactor, Heat exchanger etc. in a Petroleum Refinery/ Petrochemicals / Fertilizer/ Heavy Chemical/ Gas Processing Industry போன்ற பணிகளில் ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
IOCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Test and a Skill / Proficiency / Physical Test (SPPT) என இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IOCL JEA விண்ணப்பக் கட்டணம் :

General, EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.150/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்து முடித்த பின் அந்த படிவத்தின் நகரினை 27.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification for IOCL Recruitment 2021

Online Application form for IOCL JEA Recruitment 2021 

9Official site