அடடே!!! எலுமிச்சை பழத்தில் இவ்ளோ நன்மைகளா..??

நமது நாட்டில் உணவு முறைகளில் ஆறு சுவைகள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. அதில் ஒன்று புளிப்பு சுவை ஆகும். நம் நாட்டில் புளியம் பழங்கள் உணவுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சை சாறு மட்டும் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது. பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்த எலுமிச்சம் பழம் தற்போது உலகெங்கிலும் பயிரிடப்படுகிறது. அந்த எலுமிச்சம் பழத்தை மற்றும் அதன் சாற்றை அருந்துவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஷெமிக் ஸ்ட்ரோக் ஷெமிக் எனப்படும் ஒருவகையான வாத நோய் பெண்களுக்கு அதிகம் ஏற்படுறது.

அமெரிக்க இதய நல மருத்துவர் சங்கம் நடத்திய ஆய்வுகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சம் பழச்சாறு மற்றும் எலுமிச்சம் பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புற்று நோய்களை தடுக்க பழங்காலம் முதலே புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சைஅதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.
உடல் எடை குறைய தற்போதைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அவர்களின் வயதுக்கு மீறிய அதீத உடல் எடை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது. பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம் சிட்ரிக் ஆசிட் எனப்படும் சிட்ரிக் அமிலம் நிறைந்த பழ வகைகளில் ஒன்று எலுமிச்சை. இதில் நிறைந்திருக்கும் சிட்ரிக் அமிலம் உள்ள மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.