ரேஷன் கார்டில் உங்கள் இருப்பிடத்தை ஆன்லைனிலேயே மாற்றலாம்!!!

சென்னை: ரேஷன் கார்டில் உங்கள் இருப்பிடத்தை ஆன்லைனிலேயே மாற்ற முடியும். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

ரேஷன் கார்டு (Ration Card) பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல, பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” (One nation one ration card) திட்டத்தின் கீழ் எங்குவேண்டுமானாலும் ரேஷன் கார்டு இருந்தால் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation One Ration Card) என்ற திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இருப்பிடம் மாற்றலாம்

நீங்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த ரேஷன் கடைகளுககு சென்றாலும் பொருட்களை வாங்க உங்க முகவரியை ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

எப்படி மாற்றலாம்

www.pdsportal.nic.in என்ற லிங்க்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் உள்நுழையுங்கள் . இந்த இணையதள்த்தில் உள்ள முகப்புப் பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள ‘மாநில அரசு இணையதளங்கள்’ (‘State Government Portals’) என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

இணைய பக்கம்

அதன் பிறகு மாநிலங்களின் பட்டியலை நீங்கள் பெறுவீர்கள். இப்போது எந்த மாநிலம் வேண்டுமோ அந்த மாநிலத்தில் இருக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுங்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த மாநிலத்துடன் தொடர்புடைய மற்றொரு பக்கத்திற்கு அது உள்ளே செல்லும்

ரேஷன் கார்டு முகவரி மாற்றம்

நீங்கள் இப்போது ‘ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம்’ அல்லது ‘ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம்’ (‘ration card address change form’ or ‘change in ration card form’) தொடர்பான பொருத்தமான லிங்க்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யூசர் ஐடி, பாஸ்வேர்டுகேட்கும். அதை இல்லாவிட்டால் உருவாக்கி கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள். தேவையான விவரங்களை சரியாக நிரப்பி, பின்னர் ‘சமர்ப்பி’ (Submit) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்., பின்னர் தேவை எனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்துகொள்ளலாம்.
இந்த செயல்முறையைப் பின்பற்றும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு போர்ட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெவ்வேறு மாநிலங்களுக்கான ஸ்டெப்ஸ்கள் மாறுபடும். அதற்கு தகுந்தாற் போல் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் https://tnpds.gov.in/login.xhtml இந்த இணைய முகவரிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்