அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் மருத்துவ இயற்பியல் துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Professional Assistant – II பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள எங்கள் வலைதளத்தில் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அண்ணா பல்கலை பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறையில் Professional Assistant – II பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Anna University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Medical Physics, Physics, Photonics, Biphotonic, Biophysics, Material Science என இவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Anna University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு ரூ.713/- வரை சம்பளம் வழங்கப்படும்.

அண்ணா பல்கலை தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு/ நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Anna University Notification PDF