தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள், பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் உரிய அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன.

பிளஸ் – 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட பி.ஏ. விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி மாலைக்குள்ளும், பிற விண்ணப்பங்கள் ஜூன் 29-ம் தேதிக்குள்ளும் கிடைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.200 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100 மட்டும், சாதிச்சன்று நகல் தேவை) ஆகும். விண்ணப்பத்தை அஞ்சலில் பெற, விண்ணப்ப கட்டணம், அஞ்சல் கட்டணம் ரூ.50 அனுப்ப வேண்டும்.

வங்கி வரைவோலை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai – 5 என்ற பெயரில் எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு 9884159410, 044 – 28440102 எண்களில் அல்லது tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.