தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 8வது தேர்ச்சி போதுமானது !!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 8வது தேர்ச்சி போதுமானது !!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது அதன் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant, Record Clerk மற்றும் Security/ Watchman பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள எங்கள் வலைதளத்தில் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசு பணியிடங்கள் 2021 :

Assistant, Record Clerk மற்றும் Security/ Watchman பணிகளுக்கு 185 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

TNCSC கல்வித்தகுதி :
  • Record Clerk பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  • Security/ Watchman – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்
ஊதிய விவரம் :
  1. Record Clerk பணிகள் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  2. Assistant – ரூ.2359 + ரூ.4049/-(அகவிலைப்படி)
  3. Security/ Watchman – ரூ.2359 + ரூ.4049/-(அகவிலைப்படி)
தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.