வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்

வேலை வாய்ப்பற்றோர்க்கானஉதவித்தொகை வழங்கும்திட்டம்

தமிழக அரசு சார்பில்வேலைவாய்ப்பற்றஇளைஞர்களுக்கானஉதவித்தொகை வழங்கும்திட்டத்தின் கீழ் உதவித்தொகைபெற விருப்பமுள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம் என திருச்சிமாவட்ட கலெக்டர்தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுவேலைவாய்ப்பற்றஇளைஞர்களுக்கானஉதவித்தொகை வழங்கும்திட்டத்தின் கீழ் ஒவ்வொருஆண்டும் உதவித்தொகைவழங்கி வருகிறது. தற்போதுகொரோனா வைரஸ் காரணமாகபலர் வேலையிழந்தசூழ்நிலையில் இந்தஉதவித்தொகை பெரும்உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ்மாதந்தோறும், 9 ஆம் வகுப்புபடித்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர்களுக்கு ரூ.200/-உதவித்தொகையும், 10 ஆம்வகுப்பு பயின்றவர்களுக்குரூ.300/- உதவித்தொகையும், 12ஆம் வகுப்பு பயின்றவர்களுக்குரூ.400/- உதவித்தொகையும்,பட்டதாரிகளுக்கு ரூ.600/-வழங்கப்படுகிறது. மேலும்மாற்றுத்திறனாளிகள் 10 ஆம்வகுப்பிற்கு கீழ்பயின்றவர்களுக்கு ரூ.600/-உதவித்தொகையும், 12 ஆம்வகுப்பு பயின்றவர்களுக்கும்ரூ.750/- உதவித்தொகையும்,பட்டதாரிகளுக்கு ரூ.1000/-உதவித்தொகையும்வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின பிரிவினர் 45வயதுக்குள்ளும், இதர பிரிவினர்40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்.விண்ணப்பதாரர்களின்அதிகபட்ச குடும்ப வருமானம்ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும். அரசு சார்ந்தஏதேனும் உதவித்தொகைபெறுபவர்கள் இந்தஉதவித்தொகை பெற இயலாது.இந்த உதவித்தொகைபெறுபவர்கள் எந்த கல்விநிறுவனத்திலும் பயிலக் கூடாது.

ஏற்கனவே 3 ஆண்டுகள்உதவித்தொகை பெற்றவர்மற்றும் பொறியியல் மருத்துவம்,விவசாயம் மற்றும் சட்டம்போன்ற தொழில்பட்டப்படிப்புகள்முடித்தவர்களுக்குவேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெறதகுதியில்லை.

உதவித்தொகை பெற தகுதிஉள்ளவர்கள் வேலைவாய்ப்புஅலுவலக அடையாள அட்டை,அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அசல் குடும்பஅட்டை ஆகியவற்றுடன் திருச்சிமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டுதல்மையத்தில் விண்ணப்பங்களைஇலவசமாக பெற்று பூர்த்திசெய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு:https://tnvelaivaaippu.gov.in/