உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால்.. மாரடைப்பு ஏற்படலாம்…

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.அறிகுறிகள்:

1.நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகோ அல்லது நீண்ட தூரம் நடந்த பிறகோ மூச்சி விடுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றால் அது அடைபட்ட தமனிகளின் அறிகுறியாக இருக்கலாம். இது சில நாட்களுக்கு பிறகு மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

2.இதயத்திற்கு ஆக்சிஜன் நிறைந்து ரத்த ஓட்டம் இல்லாததால் நீங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது உங்கள் இதயத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் சின்ன வேலை செய்தால் கூட உங்களுக்கு அதிகப்படியாக வியர்வை ஏற்படும்.

3.உங்கள் தமனி அடைபட்டு இருந்தால் மார்பில் வலி இருக்கும், இறுக்கம் அல்லது அழுத்தத்தை உணரலாம். இந்த உணர்வு சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். சில சமயம் மார்பு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

4.உங்களின் இதயம் சரியாக செயல்படாத போது செரிமான மண்டலத்திற்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், இரப்பை குடல் பிடிப்புகள், குமட்டல் போன்றவை ஏற்படும். வாந்தி அல்லது செரிமானமின்மை உணர்ந்த உங்களுக்கு குளிர் வியர்வை மற்றும் தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் தமனி அடிப்பு இருப்பதை காட்டுகிறது.

5.மாரடைப்பை ஏற்படுத்தும் திடீரென்று சோர்வு அல்லது மூச்சு வாங்குவது போன்று நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை பார்க்கவும். அதிக சோர்வு மற்றும் அறிவிக்கப்படாத பலவீனம் சில நேரம் உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

6.நீங்கள் பதட்டமாக அல்லது உற்சாகமாக இருக்கும் போது உங்களுக்கு தாறுமாறாக இதயம் துடிப்பு இருப்பது இயல்பானது. ஆனால் சில நொடிகளுக்கு மேல் உங்கள் இதயம் வேகமாக துடித்தது நீங்கள் உணர்ந்தால், அது அடிக்கடியும் நடந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.குறிப்பு:முன்கூட்டியே அறிகுறிகளைக் கண்டறிவது அடைபட்ட தமனிகளில் சிகிச்சை மேம்படுத்துவதோடு, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.