தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 200 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப பயனடையலாம்

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் :200

பணி : பாதுகாவலர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.4,049 மாதம்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை :முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் 12.02.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் தகுதியானவர்கள் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.