அரசு ஐடிஐ.யில் தையல் பின்னலாடை குறுகிய கால பயிற்சி

Short-term training in sewing knitting at Government ITI

அரசு ஐடிஐ.யில் தையல்பின்னலாடை குறுகிய காலபயிற்சி

ஓசூர் அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில் தையல் மற்றும்பின்னலாடை தயாரிப்புகுறுகியகால பயிற்சிக்குசேர்க்கை நடை பெறுகிறது.

ஓசூர் அரசு தொழிற்பயிற்சிநிலைய நிர்வாகம்வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

தையல் மற்றும்பின்னலாடை தயாரிப்புதொடர்பான குறுகிய காலபயிற்சியில் அனைத்து தரப்புமக்களும் குறிப்பாக மகளிர்பயன்பெறும் வகையில் 40 காலிஇடங்களுக்கு சேர்க்கைநடைபெறுகிறது.

18 வயதிலிருந்து 40வயதுக்குட்பட்ட பள்ளிப் படிப்புமுடித்தவர்கள் படிப்பை பாதியில்நிறுத்தியவர்கள், வேலை தேடும்இளைஞர்கள் மற்றும் மகளிர்உள்ளிட்டவர்களுக்கு காலை 9மணி முதல் மதியம் 1 மணி வரைபயிற்சி நடைபெறும்.

3 மாத கால பயிற்சியில்சேர்ந்து பயிற்சி முடித்தஅனைவருக்கும்நிறுவனங்களில் உடனடியாகவேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். பயிற்சியின்முடிவில் தமிழக அரசின்சான்றிதழ் வழங்கப்படும்.குறைந்தபட்ச தகுதி 8.ம் வகுப்புதேர்ச்சியாகும். விண்ணப்பகட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கைகட்டணம் ரூ.100 செலுத்தவேண்டும்.

தகுதியும், விருப்பமும்உள்ளவர்கள் தங்களின் அசல்கல்விச் சான்றிதழ்கள் மற்றும்நகல்களுடன் வரும் 15.ம் தேதிவரை அலுவலக வேலைநாட்களில் ஓசூரில் உள்ளஅரசினர் தொழிற்பயிற்சிநிலையதுணை இயக்குநரைநேரில் அணுகி பயிற்சியில்சேர்ந்து பயன்பெறலாம்