நொறுக்கு தீனியால் பெண்களுக்கு ஆபத்து அதிகம்!!

எண்ணெய்யில் பொறித்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களைவிட பெண்களுக்கு உடல்ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஒருவருக்கு உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். அதில் மாறுபாடு ஏற்பட்டாலே உடல் நிலை சரியாக இல்லை என்று பொருள். அதிலும் ஜங்க் ஃபுட் எனப்படும் நொறுக்கு தீனிகளை அதிகம் சாப்பிடும் போது அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

அதனால் முடிந்த வரை நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. சமோசா, பீட்சா, பர்கர், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

நோய் பாதிப்பில் ஆண், பெண் வேறுபாடு இல்லை என்றாலும் கூட நொறுக்குத்தீனி பெண்களை அதிகம் பாதிக்கிறது.

காரணம் பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் சிறிய அளவில் இருக்கும். ஹார்மோன், என்சைம் ஆகியவை குறைவாக சுரக்கும். அதனால் துரித உணவுகளை உட்கொள்ளும் போது பெண்கள் ஆண்களைவிட விரைவில் பாதிக்கப்படுகின்றனர்.