மொத்தம் 194 காலியிடங்கள்! ஊதியம் ரூ.1.77 லட்சம்.!! விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள மத குரு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 194 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்

மொத்தம் 194 காலியிடங்கள்! ஊதியம் ரூ.1.77 லட்சம்.!! விண்ணப்பிக்கலாம் வாங்க  

நிர்வாகம் : இந்திய இராணுவம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Religious Teacher

மொத்த காலிப் பணியிடங்கள் :194

கல்வித் தகுதி :

Pandit and Pandit (Gorkha) – Acharya in Sanskrit அல்லது Shastri in Sanskrit பட்டம் பெற்றிருக்க வேண்டும். Karam Kand பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Granthi – பஞ்சாபியில் கியானி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Maulvi and Maulvi (Shia) – முஸ்லீம் வேட்பாளர்கள் அரபு மொழியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் ஆதிப் ஆலிம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Padre – திருச்சபை அதிகாரத்தால் ஆசாரியராக நியமிக்கப்பட்டு, உள்ளூர் பிஷப்பின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

Bodh Monk (Mahayana) –பொருத்தமான அதிகாரத்தால் துறவி / புத்த பாதிரியாராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 09.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : உடல் தகுதி சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ சோதனை மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.