தேசிய தேர்வு முகமை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

தேசிய தேர்வு முகமை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

National Testing Agency எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Academic Consultants பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Academic Consultants பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NTA கல்வித்தகுதி :
  1. Ph.D. Degree முடித்த Associate Professor/ Professor ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. மேலும் Academic Consultants. பணிகளில் அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
NTA ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்ட பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஊதியமாக ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் recruitment@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்படிவங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NTA Recruitment 2021 Official Notification PDF

Official Site