நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள் சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் நிலக்கரி நிறுவனம் மத்திய சுரங்கத் துறையின் கீழ் செயல்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 672 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் பிரிவில் 180 பேரும், எலக்ட்ரீசியன் (மைன்) பிரிவில் 172 பேரும் சேர்க்கப்படு கிறார்கள்.

ஸ்டெனோகிராபர், வெல்டர், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், ஆட்டோ எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஹாஸ்பிடல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. 8, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 7-5-2018-ந் தேதியில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக 7-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை http://www.secl-cil.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.