தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு 2021 – 991 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி.யில் இருந்து 991 காலிப்பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 5 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 991 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 04.03.2021 இறுதி நாள். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2021:

Agricultural Officer (Extension), Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer மற்றும் Assistant Director & Horticulture Officer ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 991 பணியிடங்கள் காலியாக உள்ளன. டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர அட்டவணையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கு வெளியாக வேண்டிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Agricultural Officer (Extension) – 365
Assistant Agricultural Officer – 106+16*
Assistant Horticultural Officer – 204 + 103*
Assistant Director & Horticulture Officer – 197

TNPSC வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

டி.என்.பி.எஸ்.சி கல்வி தகுதி:
Assistant Director of Horticulture:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் M.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.

Horticultural Officer:

அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் B.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.

Agricultural Officer:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்திருக்க வேண்டும். தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

உதவி வேளாண்மை அலுவலர் (AAO):

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தமிழ்நாட்டின் மூலம் இணைக்கப்பட்ட விவசாய பல்கலைக்கழகம் அல்லது வேளாண் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் வேளாண்மையில் இரண்டு வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

உதவி தோட்டக்கலை அலுவலர் (AHO) கல்வி தகுதி:

மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தோட்டக்கலையில் இரண்டு ஆண்டுகளில் டிப்ளோமா படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC விண்ணப்பிக்கும் முறை :

தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் நன்கு படித்து ஆன்லைன் மூலம் 05.02.2021 முதல் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Online