பிப்ரவரி 12ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

சேலம் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்து உள்ளார். அது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

தனியார் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி வரும் பிப்ரவரி 12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை தேடுபவர்கள், வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும்

இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியில் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்கள் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.