அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அலுவலக உதவியாளர் – 10
பதிவறை எழுத்தர் – 03
ஈப்பு ஓட்டுநர் – 04
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். 01.07.2020ம் தேதியன்று பொது பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு பொது பிரிவினரைவிட 10 வயது கூடுதலாக இருக்கலாம்.
ஊராட்சித் துறை கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர்:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர்:
10ம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் :
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செல்லத் தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000
பதிவறை எழுத்தர் – ரூ.15,900 to ரூ.50,400
ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.02.2021 அன்று பிற்பகல் 5,45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.