விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கேபின் குரூவ் பணியிடங்களுக்கு 295 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் ஆண்களுக்கு 86 இடங்களும், பெண்களுக்கு 209 பணியிடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

அனுபவம் உள்ள கேபின் குரூவ் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி, டிராவல் அண்ட் டூரிசம் பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தி அல்லது ஆங்கில மொழியறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airindia.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.