தமிழக அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் 23-02-2021 க்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

தமிழக அரசு தலைமை செயலக காலிப்பணியிடங்கள்:

சென்னை தலைமை செயலக தொழிற் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராக வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்

கல்வித்தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக அரசு சம்பளம்:

ரூ.15700 – 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை முறையாக பூர்த்தி செய்து 23-02-2021க்குள் தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

அரசு துணைச் செயலாளர்,
தொழில் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை -600009.