5 ஆம் வகுப்பு முடித்தவரா ? – ரூ.35,100/-ஊதியத்தில் தமிழக வருவாய் துறை அலுவலக வேலைவாய்ப்பு

திருவள்ளூர் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 17-02-2021-ம் தேதி 5.45 மணிக்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

கிராம உதவியாளர் – 145

வருவாய் துறை வயது வரம்பு:

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்ட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

கிராம உதவியாளர் – ரூ.11,100 to ரூ.35,100/-

கிராம உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில்/ வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் தபால்/ நேரடியாக 17.02.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf