ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

இந்திய ரெயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே கார்ப்பரேசன் லிமிடெட். மற்ற ரெயில்வே மண்டலங்களுடன் சாராத, அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரெயில்வே அமைப்பாக இது செயல்படுகிறது.

மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் தற்போது ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 113 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 55 இடங்களும், கூட்ஸ் கார்டு பணிக்கு 37 இடங்களும் உள்ளன.

பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்கள் சீனியர் கிளார்க் பணிக்கும், மற்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதர பணிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.konkanrailway.com/ என்ற இணைய தளத்தின் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.