சிறுநீரக பிரச்சனை ஏற்படாமல் இருக்க !!!!.இதை எல்லாம் முறையாக பின்பற்றுங்கள் !!!..

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களும், உணவுப் பொருள்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது. அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சோடா அதிகமாக குடித்து வந்தால் சிறுநீரகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும்.

சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்குவதால் தான் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது.

எனவே இதைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் இந்த சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. எனவே இரவு நேரத்தில் நல்ல தூக்கம் இல்ல்லையென்றால் சிறுநீரகம் நேரடியாக பாதிக்கப்படும்.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் சிறுநீரகம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. சரியான அளவில் நீங்கள் தண்ணீர் குடித்து வந்தால் உங்களுடைய சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வரும். இப்படி வந்தால் நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீர் பையின் அழுத்தம் அதிகரித்து அதோடு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடும்.

உப்பு உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால் இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டால் அது முதலில் சிறுநீரகத்தை தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.