உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமையும் புடலங்காய் நன்மைகள்

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமையும் புடலங்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வு காண முடியும். அவ்வாறு பல மருத்துவ குணங்கள் உடைய புடலங்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு மிகவும் உதவுகிறது

புடலங்காய் இலைச்சாற்றுடன் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை விரட்ட முடியும். காய்ச்சலையும் கட்டுப்படுத்த வல்லது. வெளி நாடுகளில் இந்த வகை காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு வலு சேர்க்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்பு குறையும். குறிப்பாக பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை குணப்படுத்த இது உதவுகிறது. கருப்பை கோளாறை போக்கும். கண் பார்வையைத் தூண்டும். நீர் சத்து இதில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக விரைவில் வெளியேற்றும். இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் மூல நோய், ஆண்மை கோளாறு போன்றவற்றுக்கு நல்ல மருந்து. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது