காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் !!..

பொதுவாக காலையில் நல்ல ஆரோக்கியமன உணவை சாப்பிடுவதோ எவ்வளவு முக்கியமோ அதைவிட தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது.

அந்தவகையில் தற்போது காலையில் எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

தயிரை காலையில் சாப்பிடும்போது அவை குடல்கலின் மேல் இருக்கும் மெல்லிய படல்த்தின் மீது வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை தந்து விடும்.

வாழைப்பழத்தில் அதிக மெக்னீசியம் இருப்பதால் அவை கால்சியம் அளவை குறைக்கச் செய்து விடும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

தக்காளி அமிலத்தன்மை கொண்டது. இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை இரைப்பை அமிலத்துடன் கலந்து கரைக்க முடியாத படிமமாக மாறி சிறு நீரகத்தில் கற்களை உண்டாக்கிவிடும்.

தினமும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறு. இவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து அமில காரச் சம நிலையில் ஏற்ற தாழ்வை தரும். இதனால் உடல் நிலை பாதிக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலை தூண்டி அதிக ஜீரண அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகும்.

வெறும் வயற்றில் குடிப்பதால் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே 2 கிளாஸ் நீரை குடித்து குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து காபி அல்லது தேநீரை குடிக்கவும்