மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது என்பதால், ஒவ்வொருவரும் அதற்காக உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை நாள்தோறும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒரு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக இருக்கின்றன. கீரைகளைப்போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்து இருக்கின்றன. அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.செரிமான மண்டலம்எண்ணெய் நிறைந்த மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் சுவைப்பதற்கு நன்றாக இருந்தாலும், உடலில் செரிமானத்துக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. இதனால், அன்றாடம் சாப்பிடும் இதுபோன்ற உணவுகள் செரிமான மண்டலத்தை சீர்குலைத்து, உடல் உபாதைகள் ஏற்பட காரணமாக அமைக்கின்றன.

உடலில் தேங்கும் கழிவுகளால் நாளடைவில் குடல்சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றன. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது. கண் பார்வைகண் பார்வை பிரச்சனைகளை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், பள்ளிக் குழந்தைகள் கூட எதிர்கொண்டு வருகிறார்கள். செல்போன், கணிணி முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பார்வைக் குறைபாடு பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட் (folate) மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.

உடல்பருமன் உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளது. பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு பிட்னஸ் சென்டர்கள் மற்றும் மருத்துவரை அணுகிவருகின்றனர். இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும். தலைவலி, முதுகுவலி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கிழங்கை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் ஜூஸாக அரைத்து நாள் ஒன்றுக்கு இருமுறை பருகினால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.மேலும், ஞாபக மறதியை குறைப்பதுடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கின்றன. மரவள்ளி கிழங்கில் உருவாக்கப்படும் ஜவ்வரிசிக் கஞ்சி வயிற்றுப் புண் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கவும் பயன்படுகின்றன. மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுவாக்குகின்றன